NZ vs BAN: ஹாட்ரிக் வெற்றி பெறுமா நியூசிலாந்து? - ODI, WC Records எல்லாம் நியூசிலாந்திற்கு சாதகம்!

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

New Zealand and Bangladesh Playing 11 Prediction for 11th Match of Cricket World Cup 2023 at Chennai rsk

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

IND vs PAK: 0.9 கிராம் தங்கத்துடன் கூடிய உலகக் கோப்பையை ரோகித் சர்மாவுக்கு பரிசாக கொடுக்கும் நகைக்கடைக்காரர்!

இதே போன்று வங்கதேச அணி விளையாடிய 2 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 5 போட்டியிலும் நியூசிலாந்து தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக் கோப்பையில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இன்னிங்ஸ் பிரேக்கில் 10 நிமிட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

ஆனால், இதுவே ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் 41 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 30 போட்டிகளில் நியூசிலாந்தும், 10 போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஆகையால், இன்று சென்னையில் நடக்கும் போட்டியிலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நியூசிலாந்து பிளேயிங் 11:

டெவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன் அல்லது இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்

வங்கதேசம் பிளேயிங் 11:

தன்ஷித் அகமது அல்லது மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், நஜ்முல்லா ஹூசைன் ஷாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிடி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹீத் ஹ்ரிதோய், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஷ்தாஃபிஜூர் ரஹ்மான்.

2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios