சூப்பர் ஓவரில் பின்னி பெடலெடுத்த வான் பீக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்; வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி!
ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் நெதர்லாந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 2 இடங்களுக்கான போட்டியில் 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாகவே தகுதி பெற்றது. இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!
இதில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன. குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் மொத்தம் 20 போட்டிகள் நடக்கும். அதன் பிறகு இந்த இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஒவ்வொரு அணியும் விளையாடாத அணிகளுடன் போட்டியிடும். இதில் கடைசியாக இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் 2 அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசில வந்து காப்பாத்தி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்; சீகம் மதுரை பாந்தர்ஸ் 141 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் ஆடியது. இதில், தொடக்க வீரர் பிராண்டன் கிங் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 54 ரன்களில் வெளியேறினார்.
பிளான் போட்டு தூக்க தயாரான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: மதுரைக்கு எதிராக பவுலிங்!
நிக்கோலஸ் பூரன் நிலைத்து நின்று ஆடி 65 பந்துகளில் 6 சிக்ஸர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் தேஜா நிடமானுரு அதிரடியாக ஆடி 76 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்காட் எட்வார்டஸ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக நெதர்லாந்து வெற்றிக்கு 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அல்சாரி ஜோசஃப் வீசினார். அப்போது பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் லோகன் வான் பீக் களத்தில் இருந்தார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர், 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3ஆவது பந்தில் ஆர்யன் தத் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியாக வான் பீக் கடைசி பந்தில் ஆட்டமிழக்கவே போட்டி டிரா ஆனது.
கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!
இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. இதில், நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் பேட்டிங் ஆடினார். ஜேசன் ஹோல்டர் பந்து வீசினார். இந்த ஓவரில் மட்டும் 4, 6, 4, 6, 6, 4 என்று மொத்தமாக 30 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் களமிறங்கினர். முதல் பந்தில் 6, 2ஆவது பந்தில் 1 ரன், 3ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 4ஆவது பந்தில் சார்லஸ் ஆட்டமிழந்தார். 5ஆவது பந்தில் ஹோல்டர் ஆட்டமிழக்கவே நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் சூப்பர் ஓவரில் கலக்கிய லோகன் வான் பீக் பந்து வீச்சிலும் சூப்பர் ஓவரில் அசத்திய நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.