கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!
கேஎல் ராகுல் கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியிலுள்ள ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயிலில் சிவபெருமானின் பெயர்களில் ஒன்றான மஞ்சுநாதரை வழிபாடு செய்துள்ளார்.
ஐபிஎல் 16ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் வலது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அவருக்குப் பதிலாக, குர்ணல் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து லண்டன் சென்று தொடை பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை மேற்கொண்டார்.
பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா: எங்கே, ஏன், எதற்கு தெரியுமா?
இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து அடுத்து இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசிய கோப்பை தொடரிலும் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கேப்டன் கூல் தோனி இல்லை, அது வேறு ஒருவர் – சுனில் கவாஸ்கர்!
ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் தான் கேஎல் ராகுல் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியிலுள்ள ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயிலில் சிவபெருமானின் பெயர்களில் ஒன்றான மஞ்சுநாதரை வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!