பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா: எங்கே, ஏன், எதற்கு தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸில் செல்லும் இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளனர்.
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக வரும் ஜூலை 2ஆம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. வரும் 12 ஆம் தேதி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது.
கேப்டன் கூல் தோனி இல்லை, அது வேறு ஒருவர் – சுனில் கவாஸ்கர்!
இதற்கு முன்னதாக பிரிட்ஜ்டவுனில், இந்தியா ஒரு வார கால முகாம் நடைபெறும். தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இன்னமும் லண்டனில் சுற்றுலா சென்று வருகின்றனர். இதன் காரணமாக விரைவில் பல பேட்ஜ்களாக கரீபியன் செல்ல உள்ளனர். சில வீரர்கள் பயிற்சி முகாமிற்காக பார்படாஸுக்குச் செல்வதற்கு முன் ஜார்ஜ்டவுன் மற்றும் கயானாவிற்கு வருவார்கள். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிற பயிற்சியாளர்களும் பார்படாஸில் அவர்களுடன் இணைய உள்ளனர்.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!
முதல் தர கிரிக்கெட் போன்று இல்லாமல் 2 பயிற்சி போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாட இருக்கின்றனர். பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸிடம் முதல் வகுப்பு போட்டிகளுக்கு கோரிக்கை விடுத்தது. எனினும், அதற்கு பதிலாக கலப்பு அணியாக இருந்து பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றனர். அதாவது, சில உள்ளூர் வீரர்களும் இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாட இருக்கின்றனர். ரோஸோவில் போதுமான வசதிகள் இல்லாத நிலையில், இந்திய அணி பார்படாஸை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆண்டிகுவாவில் உள்ள அதிக வசதிகள் கொண்ட கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தங்க உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர்கள் டொமினிகாவுக்கு செல்ல உள்ளனர். வெஸ்ட் இண்டீஸின் முக்கிய வீரர்கள் ஜிம்பாப்வேயில் நடந்து வருக உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாடி வருகின்றனர். அவர்கள் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டொமினிகா வந்தடைவார்கள். இதன் காரணமாக வரும் ஜூலை 9 ஆம் தேதி நடக்க உள்ள உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் அவர்கள் இடம் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் இறந்த எம்எஸ் தோனியின் முன்னாள் காதலி பிரியங்கா ஜா யார் தெரியுமா?