அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!

சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.

Siechem Madurai Panthers beat 12 Runs Difference against Chepauk Super Gillies in 18th Match at TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய 18ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் ஆடியது.

முதல் முறையாக விண்வெளியில் ஏவப்பட்ட ஐசிசி உலகக் கோப்பை டிராபி – 1,20,000 அடி உயரம், -65 டிகிரி செல்சியஸ்!

இதில், வரிசையாக தொடக்க வீரர்கள் ஆதித்யா 6 ரன்னும், ஹரி நிஷாந்த் ரன்னும், ஜே கௌசிக் 4 ரன்னும், லோகேஷ்வர் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னிலும், ஸ்வப்னில் சிங் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தீபன் லிங்கேஷ் 9 ரன்னில் ஆட்டமிழக்க சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது.

கடைசியாக வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரி உள்பட 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் சிலம்பரசன் மற்றும் பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ராமலிங்கம் ரோகித் மற்றும் ராஹில் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

கடைசில வந்து காப்பாத்தி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்; சீகம் மதுரை பாந்தர்ஸ் 141 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் 28 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபா அபராஜித் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் 9, 3, 6, 3, 0, 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பிளான் போட்டு தூக்க தயாரான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: மதுரைக்கு எதிராக பவுலிங்!

பந்து வீச்சில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியின் வீரர் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சரவணன் மற்றும் குர்ஜாப்னீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் மூலமாக தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios