நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை தக்க வைத்துக் கொண்டன. நெதர்லாந்து விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்ற் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், இலங்கை மட்டும் இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்துடன் நெதர்லாந்து இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உண்டாகும். ஆனால், இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், அதிகபட்சமாக 443 ரன்கள் எடுத்துள்ளது.

Pakistan vs Australia: அடி மேல் அடி வாங்கிய பாகிஸ்தான் – வச்சு செய்த ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம்

லக்னொ மைதானத்தில் இந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா 311 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறையும், 2ஆவது பேட்டிங் செய்த ஒரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.

2011 உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றிய வான்கடே ஸ்டேடியம்!