Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி தொடர்: ஜெகதீசன் சதம், சாய் சுதர்சன் அபாரம்! தமிழ்நாடுஅணியின் முதல் விக்கெட்டையே வீழ்த்தமுடியாத ஹைதராபாத்

ரஞ்சி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடிவருவதால் 2ம் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களை குவித்துள்ளது.
 

narayan jagadeesan hits century in ranji trophy match against hyderabad
Author
First Published Dec 14, 2022, 8:23 PM IST

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. தமிழ்நாடு அணி முதல் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணி:

பாபா இந்திரஜித் (கேப்டன்), சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், விஜய் சங்கர், பிரதோஷ் பால், ஆர் கவின், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அஷ்வின் கிறிஸ்ட், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், சந்தீப் வாரியர்.

அப்பா சச்சினை போலவே அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்..! புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?

ஹைதராபாத் அணி:

தன்மய் அகர்வால் (கேப்டன்), தெலுகுபல்லி ரவி தேஜா, தனய் தியாகராஜன், பிரதீக் ரெட்டி (விக்கெட் கீப்பர்), மிக்கில் ஜெய்ஸ்வால், அபிரத் ரெட்டி, ரோகித் ராயுடு, ஜாவீத் அலி, அனிகேத் ரெட்டி, பி புன்னையா, கார்த்திகேயா கக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான தன்மய் அகர்வால் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவர் 135 ரன்களை குவித்தார். பின்வரிசையில் ரவி தேஜா மற்றும் மிக்கேல் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங் ஆடினர். ரவி தேஜா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஜெய்ஸ்வால் 137 ரன்களை குவிக்க, ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடிவருகின்றனர். இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஹைதராபாத் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடி சதமடித்த ஜெகதீசன் 95 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 116 ரன்களை குவித்துள்ளார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிவரும் சுதர்சன் 87 ரன்களும் அடித்துள்ளார்.

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

2ம் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 35 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்களை குவித்துள்ளது. ஜெகதீசன் - சுதர்சன் ஜோடியை 2ம் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் பந்துவீசியும் ஹைதராபாத் அணியால் பிரிக்க முடியவில்லை. இருவருமே அடித்து ஆடியதால் தமிழ்நாடு அணி 35 ஓவரில் 203 ரன்களை குவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios