டி20 உலக கோப்பை: நமீபியா - நெதர்லாந்து இடையேயான முக்கியமான போட்டி டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையி இன்று நடக்கும் முக்கியமான தகுதிப்போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

namibia win toss opt to bat against netherlands in t20 world cup

டி20 உலக கோப்பை தொடரில் தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 இடங்களுக்கு 8 அணிகள் போட்டியிட்டுவருகின்றன.

க்ரூப் ஏ-வில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகளும், க்ரூப் பி-யில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் இடம்பெற்று தகுதிப்போட்டிகளில் ஆடிவருகின்றன.

இதையும் படிங்க - T20 World Cup:ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஷமிக்கு கடைசி ஒருஓவரை மட்டும் கொடுத்தது ஏன்? ரோஹித் விளக்கம்

க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஆசிய சாம்பியன் இலங்கையை 55 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல அமீரக அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. தங்களது முதல் போட்டியில் ஜெயித்த நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று ஜீலாங்கில் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நமீபியா அணி அனுபவமற்ற அணியாக இருந்தாலும், அந்த அணியின் டேவிட் வீசா ஐபிஎல் உட்பட உலகின் முன்னணி டி20 லீக் தொடர்களில் ஆடிவருவதால், அந்த அனுபவத்தை பயன்படுத்தி ஆடுவதுடன், தனது அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதால் அந்த அணி சிறப்பாக திகழ்கிறது.

நமீபியா அணி:

மைக்கேல் வான் லிங்கென், டிவான் லா காக், ஸ்டீஃபன் பார்ட், ஜான் நிகோல் லாஃப்டி-ஈட்டான், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜான் ஃப்ரைலிங்க், டேவிட் வீசா, ஜேஜே ஸ்மிட், ஸேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), பெர்னார்டு ஷால்ட்ஸ், பென் ஷிகாங்கோ.

இதையும் படிங்க - ஷமி Bhai, உங்களோட சீம் பவுலிங்கிற்கு நான் பெரிய ரசிகன்.! ஷாஹீன் அஃப்ரிடி - ஷமி உரையாடல்.. வைரல் வீடியோ

நெதர்லாந்து அணி:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடௌட், பாஸ் டி லீடே, காலின் ஆக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோலாஃப் வாண்டர் மெர்வி, டிம் பிரிங்கிள், டிம் வாண்டர் கக்டென், ஃப்ரெட் கிளாசன், பால் வான் மீகெரென்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios