லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற எளிய இலக்கை கோவை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணியில் சீனியர் வீரரான முரளி விஜயை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ள முரளி விஜய், இந்த டிஎன்பிஎல் சீசனில் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறார். அந்தவகையில், இந்த போட்டியில் திருச்சி அணியின் மற்ற வீரர்கள் சொதப்பிய போதிலும், அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் முரளி விஜய்.
இதையும் படிங்க - 7 மாசத்துல 7 கேப்டன்கள்.. என்னதான் நடக்குது இந்திய அணியில்..? மௌனம் கலைத்த கங்குலி
35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார் முரளி விஜய். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் திருச்சி அணி 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. 136 ரன்கள் என்ற இலக்கை கோவை அணி விரட்டிவருகிறது.
