Asianet News TamilAsianet News Tamil

பிரித்வி ஷா ஒரு அப்பாவி; எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகை தான்: கோர்ட்டில் மும்பை போலீஸ் விளக்கம்!

பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நடிகை ஸ்வப்னா கில் தான் என்று மும்பை போலீசார் கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளனர்.

Mumbai Police Gives Explanation about molestation case against the cricketer Prithvi Shaw
Author
First Published Jun 27, 2023, 11:11 AM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்வி ஷா ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு மும்பையிலுள்ள சாண்டகிரூஸ் ஹோட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார். அப்போது, நடிகை ஸ்வப்னா கில், பிரித்வி ஷா உடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு போறாங்க? யாரெல்லாம் வெளியேறிவிட்டாங்க தெரியுமா?

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷாவின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் பிரித்வி ஷாவும் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்வி ஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஸ்வப்னா கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியில் வந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார்.

சூப்பர் ஓவரில் பின்னி பெடலெடுத்த வான் பீக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்; வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி!

பிரித்வி ஷா மது போதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்வப்னா கில் அந்தேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்வப்னா புகார் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது: இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ஸ்வப்னா கில், அவரது நண்பர்கள் சோபித் தாக்கூர் கேளிக்கை விடுதி சென்று மது குடித்துவிட்டு நடனமாடியுள்ளனர்.

அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!

அப்போது சோபித் தாக்கூர், தனது செல்போனில் பிரித்வி ஷாவை வீடியோ எடுத்துள்ளார். ஆனால், அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்வப்னா கில் கூறுவது போன்று பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான எந்த சம்பவமும் நடைபெறவில்லை. மேலும், ஸ்வப்னா கில் தான், பேஸ்பால் மட்டையுடன் பிரித்விஷாவின் காரை தாக்கியது தெளிவாக பதிவாகியுள்ளது. இறுதியாக, ஸ்வப்னா கில் அளித்த புகார் பொய்யானது என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு கில் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மேற்கொண்டு விசாரணை நாளை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முதல் முறையாக விண்வெளியில் ஏவப்பட்ட ஐசிசி உலகக் கோப்பை டிராபி – 1,20,000 அடி உயரம், -65 டிகிரி செல்சியஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios