தடுமாறிய மும்பை– காப்பாற்றிய நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், அமெலியா கேர் – யுபிக்கு 161 ரன்கள் இலக்கு
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 160 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்றைய 14ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, யாஷ்டிகா பாட்டியா மற்றும் ஹேலீ மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
பிரண்ட் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராஜேஸ்வரி கெயக்வாட் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 33 ரன்களில் சைமா தாக்கூர் பந்தில் நடையை கட்டினார். அடுத்து அமெலியா கெர் 39 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசியாக சஜீவன் சஜனா 22 ரன்கள் எடுத்துக் கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் சமரி அத்தபத்து 2 விக்கெட்டும், ராஜேஸ்வரி ஜெயக்வாட், தீப்தி சர்மா, சைமா தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
யுபி வாரியர்ஸ்:
அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கிரன் நவ்கிரே, சமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், ஷ்வேதா ஷெராவத், தீப்தி சர்மா, உமா சேத்ரி, பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாக்கூர்.
மும்பை இந்தியன்ஸ்:
ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கேர், பூஜா வஸ்த்ரேகர், அமன்ஜோத் கவுர், சஜீவன் சஜனா, ஹூமைரா கஸீ, சப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
- Alyssa Healy
- Amanjot Kaur
- Amelia Kerr
- Asianet News Tamil
- Chamari Athapaththu
- Cricket
- Deepti Sharma
- Grace Harris
- Harmanpreet Kaur
- Hayley Matthews
- Humaira Kazi
- Kiran Navgire
- Mumbai Indians
- Nat Sciver-Brunt
- Pooja Vastrakar
- Poonam Khemnar
- Rajeshwari Gayakwad
- S Sajana
- Saika Ishaque
- Saima Thakor
- Shabnim Ismail
- Shweta Sehrawat
- Sophie Ecclestone
- UP Warriorz
- UP Warriorz vs Mumbai Indians Women
- Uma Chetry
- Yastika Bhatia