3ஆவது முறையாக ஆர்சிபியை வச்சு செஞ்ச மும்பை இந்தியன்ஸ் – வெற்றியோடு கம்பீரமாக மீண்டும் நம்பர் 1 இடம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த 9ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீசியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஷோஃபி டிவைன் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஆரம்பத்திலேயே ஆர்சிபி தடுமாறியது. அதன்பிறகு வந்த சப்பினேனி மேகனா 11 ரன்களில் நடையை கட்டினார். ரிச்சா கோஷ் 7 ரன்களிலும், ஷோபி மொலினெக்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஜார்ஜியா வேர்ஹாம் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாங்கா பாட்டீல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் பூஜா வஸ்த்ரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இஸி வாங் மற்றும் சைகா இஷ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் யாஷ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் யாஷ்திகா 31 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூஸ் 26 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 27 ரன்கள் எடுத்துக் கொடுக்க, கடைசியாக அமெலியா கெர் 24 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 40 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. ஆர்சிபி 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சீச்சனில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சேஸிங்கில் தான் 2 போட்டியிலும் மும்பை வென்றிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ்:
ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர், இஷி வாங், சஜீவன் சஞ்சனா, அமோன்ஜித் கவுர், ஹுமைரா காஸி, கீர்த்தனா பாலகிருஷ்ணா, சைகா இஷாக்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோபி மொலினெக்ஸ், ஜார்ஜியா வேர்கிராம், ஷ்ரேயங்கா பாட்டீ, சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.
- Amanjot Kaur
- Amelia Kerr
- Asha Sobhana
- Ellyse Perry
- Georgia Wareham
- Harmanpreet Kaur
- Hayley Matthews
- Humaira Kazi
- Issy Wong
- Keerthana Balakrishnan
- MI vs RCB
- Mumbai Indians
- Mumbai Indians Womens
- Nat Sciver-Brunt
- Pooja Vastrakar
- RCB
- Renuka Thakur Singh
- Richa Ghosh
- Royal Challengers Bangalore
- S Sajana
- Sabbhineni Meghana
- Saika Ishaque
- Shreyanka Patil
- Simran Bahadur
- Smriti Mandhana
- Sophie Devine
- Sophie Molineux
- WPL 2024
- WPL 2024 Season 2
- WPL Season 2
- Womens Premier League 2024
- Yastika Bhatia