IPL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்? 2வது தகுதிப்போட்டியில் மும்பை - குஜராத் பலப்பரீட்சை! டாஸ் ரிப்போர்ட்
ஐபிஎல் 16வது சீசனில் 2வது தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ம் தேதி நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
ICC WTC ஃபைனலில் இஷான் கிஷன் - பரத் இருவரில் யார் விக்கெட் கீப்பர்..? ரவி சாஸ்திரி கருத்து
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இருபலம் வாய்ந்த அணிகள் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. நாக் அவுட் போட்டியான இது அகமதாபாத்தில் மழை பெய்ததால் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.
ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கேப்டன்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.
IPL 2023: பெரிய மேட்ச்சை ஜெயிக்கும் வித்தை அறிந்தவர் தோனி..! கங்குலி புகழாரம்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.