IPL 2023: பெரிய மேட்ச்சை ஜெயிக்கும் வித்தை அறிந்தவர் தோனி..! கங்குலி புகழாரம்
சிஎஸ்கே அணி மற்றும் கேப்டன் தோனியை வெகுவாக புகழ்ந்துள்ளார் சௌரவ் கங்குலி.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
IPL 2023: 5 ரன்னுக்கு 5 விக்கெட்.. ஐபிஎல்லில் சாதனைகளை வாரிக்குவித்த ஆகாஷ் மத்வால்..!
சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் தோனி தான் முக்கிய காரணம். இந்த சீசன் தான் அவருடைய கடைசி சீசனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவரும் சிஎஸ்கே அணியும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளனர்.
அந்தவகையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. பெரிய போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் ஜெயிக்கும் வித்தையறிந்தவர் தோனி. முதல் தகுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும் வலுவான அணியுமான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்
இந்நிலையில், தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய சௌரவ் கங்குலி, சிஎஸ்கே அணியும் தோனியும் அபாரம். பெரிய போட்டிகளை எப்படி ஜெயிக்க வேண்டுமென்று காட்டுகிறார் தோனி. அவரது கேப்டன்சி அபாரமாக உள்ளது என்றார் கங்குலி.