ICC WTC ஃபைனலில் இஷான் கிஷன் - பரத் இருவரில் யார் விக்கெட் கீப்பர்..? ரவி சாஸ்திரி கருத்து
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இஷான் கிஷன் - கேஎஸ் பரத் ஆகிய இருவரில் யார் விக்கெட் கீப்பராக ஆடவேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-2021 ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து அணி.
கடந்த முறை ஃபைனலுக்கு முன்னேறி கோப்பையை இழந்த இந்திய அணி இந்த முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
IPL 2023: MI vs GT போட்டியில் யாருக்கு வெற்றி..? ஆகாஷ் சோப்ராவின் அனலிசிஸ்
வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த முறை ஃபைனலில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்குகின்றன. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஆடவில்லை. இங்கிலாந்தில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் மட்டுமல்லாது, ஃபைனல் நடக்கும் லண்டன் ஓவலில் ஏற்கனவே சதமும் அடித்திருக்கிறார் ரிஷப் பண்ட். எனவே ரிஷப் பண்ட் ஆடாதது பேட்டிங்கில் பின்வரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு.
ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், கேஎஸ் பரத் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் அவர்கள் இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பராக ஆடுவார். இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் விக்கெட் கீப்பிங்கில் திறமையானவர் தான் விக்கெட் கீப்பராக ஆடவேண்டும். பேட்டிங்கை விட சிறந்த விக்கெட் கீப்பர் தான் இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடவேண்டும்.
IPL 2023: பெரிய மேட்ச்சை ஜெயிக்கும் வித்தை அறிந்தவர் தோனி..! கங்குலி புகழாரம்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேஎஸ் பரத் - இஷான் கிஷன் ஆகிய இருவரில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்று பார்த்து அவரைத்தான் விக்கெட் கீப்பராக ஆடவைக்க வேண்டும். ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் பரத் தான் விக்கெட் கீப்பராக ஆடினார். எனவே அவர் தான் முதன்மை ஆப்சனாக இருப்பார். இஷான் கிஷனை நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அறிமுகப்படுத்துவது என்பது சரியாக இருக்காது என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.