IPL 2023: GT vs MI போட்டி டாஸ் ரிப்போர்ட்..! மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்
ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் 2 பலமான அணிகள் மோதுவதால் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக ரைலீ மெரிடித்தும், ரித்திக் ஷோகீனுக்கு பதிலாக குமார் கார்த்திகேயாவும் ஆடுகின்றனர்.
IPL 2023: விராட் கோலிக்கு தடை..? பீதியில் ஆர்சிபி
குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் ஆடுகிறது. இம்பேக்ட் பிளேயராக ஜோஷுவா லிட்டில் ஆடுவார் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ரைலீ மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.