Asianet News TamilAsianet News Tamil

IPL 2024: பஞ்சாயத்து இருந்தாலும், ரோகித் சர்மாவை பாசத்துல கட்டியணைத்த ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, பயிற்சி நிகழ்வின் போது ரோகித் சர்மாவை சந்தித்து அவரை கட்டியணைத்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Mumbai Indians Skipper Hardik Pandya Hug Rohit Sharma in MI Training Session at Wankhede Stadium ahead of IPL 2024 rsk
Author
First Published Mar 20, 2024, 10:38 PM IST

ஐபிஎல் பேச்சு ஆரம்பித்தது முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல குளறுபடிகள் நடக்க தொடங்கியது. முதலில் ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. ஆனால், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் அணியில் தக்க வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து 10 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒப்பந்தம் செய்தது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது முதல் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ரோகித் ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக எக்ஸ் பக்கத்தில் காரசாரமான விவாதம் ஹர்திக் அண்ட் ரோகித் ரசிகர்களுக்கிடையில் நடந்தது.

ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: எனது தோள்களில் எப்போதும் ரோகித் சர்மாவின் கை இருக்கும். ஒரு கேப்டனாக அணியை வழிநடத்துவது தடுமாறும் போது அவர் எனக்கு உதவியாக இருப்பார்.

ரசிகர்களின் எமோஷன்ஸ் நன்றாக புரிகிறது. மும்பை அணியின் கேப்டனாக நான் சிறப்பாக விளையாடி எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியை ரோகித் சர்மா திறம்பட வழிநடத்தி வருகிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பிறகு அவருடன் பேசுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தனது பயிற்சியை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சியின் போது ரோகித் சர்மாவைச் சந்தித்த ஹர்திக் பாண்டியா அவரை கட்டியணைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

இந்த ஆண்டுக்கான 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 24 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகள்:

மார்ச் 24: குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத் – இரவு 7.30 மணி

மார்ச் 27 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 01 – ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 07 – டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios