குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி யஸ்திகா பாட்டியா மற்றும் ஹைலீ மேத்யூஸ் இருவரும் மும்பை அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.

முதல் பவுண்டரி, முதல் சிக்சர், முதல் விக்கெட் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்த வீராங்கனைகள்!

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:

யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சைகா இஷாக், ஹுமைரா கஷி.

உத்தேச குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, ஜார்ஜியா வாரேஹம், ஸ்னே ராணா, தனுஜா கன்வர், மோனிகா படேல், மான்சி ஜோஷி

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

இதில், யஸ்திகா பாட்டியா மும்பை இந் தியன்ஸ் அணிக்கான முதல் ரன்னை எடுத்தார். அவர் 8 பந் துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனுஜா கன்வர் பந்தில் வரேஹம்மிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஷிவர் பிரண்ட் களமிறங்கினார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் முதல் பவுண்டரியும், முதல் சிக்சரும் விளாசிய ஹைலீ மேத்யூஸ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் களமிறங்கினார். ஹாட்ரிக் பவுண்டரி விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 30 பந்துகளில் 13 பவுண்டரி விளாசி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று அமீலியா கேர் 24 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரி உள்பட 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக பூஜா வஸ்ட்ரேகர் (15), வோங் (6) ஓரளவு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்தது. முதல் சீசனின் முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை மும்பை இந்தீயன்ஸ் அணி படைத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்காக பிரியாவிடை போட்டியில் பங்கேற்கும் சானியா மிர்சா!

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் தொடக்க விழாவின் போது நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்களுக்கு மேல் எடுத்தது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சீசனின் தொடக்க விழாவின் போது 207 ரன்கள் எடுத்துள்ளது.


மும்பை இந்தியன்ஸ்:

முதல் ரன் - யஸ்த்கா பாட்டியா

முதல் பவுண்டரி - ஹைலீ மேத்யூஸ்

முதல் சிக்சர் - ஹைலீ மேத்யூஸ்

முதல் அரைசதம் - ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்)

முதல் விக்கெட் - ஷிவர் பிரண்ட் (ஹர்லீன் தியோல்)


குஜராத் ஜெயிண்ட்ஸ்:

முதல் ஓவர் - ஆஷ்லே கார்ட்னெர்

முதல் விக்கெட் - தனுஜா கன்வர்

முதல் வைடு - மான்சி ஜோஷி

முதல் ரன் - சபினேனி மேகனா

9 சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டு 6 சாதனைகளை தகர்த்த தமிழக மாணவிகள்!