மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் யஸ்திகா பாட்டியா முதல் ரன் கணக்கை தொடங்கி வைத்தார்.

ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் இந்த ஆண்டு முதல் ஆரம்பமானது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த லீக் தொடரின் முதல் நாளான இன்று கியாரா அத்வானி, கிரிதி சனோன் ஆகியோர் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர். பஞ்சாப் பாடகர் ஏ.பி.திலன் பாடல் பாடினார்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந் தியன்ஸ் அணியில் யஸ்திகா பாட்டியா மற்றும் ஹைலீ மேத்யூஸ் ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். இந்த தொடரின் முதல் ரன்னை யஸ்திகா பாட்டியா தொடங்கினார். அவர் ஒரு ரன் அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார்.

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

இதையடுத்து, ஹைலீ மேத்யூஸ் முதல் சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் முதல் சிக்சரை அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார். இதே போன்று, முதல் பவுண்டரியும் அவர் தான் அடித்தார். முதல் விக்கெட் எடுத்த வீராங்கனை பட்டியலில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தனுஜா கன்வர் இடம் பிடித்தார். ஆம், அவர் யஸ்திகா பாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் ஜார்ஜியா வாரேஹம் முதல் சீசனுக்கான முதல் கேட்ச் பிடித்தார். 

WPL: பிரமாண்டமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் பௌலிங் தேர்வு!

தற்போது வரையில் மும்பை இந் தியன்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 26 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதம் அடித்தவர் பட்டியலில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்கிறார்.

மும்பை இந்தியன்ஸ்:

முதல் ரன் - யஸ்த்கா பாட்டியா

முதல் பவுண்டரி - ஹைலீ மேத்யூஸ்

முதல் சிக்சர் - ஹைலீ மேத்யூஸ்

முதல் அரைசதம் - ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்)

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

முதல் ஓவர் - ஆஷ்லே கார்ட்னெர்

முதல் விக்கெட் - தனுஜா கன்வர்

முதல் வைடு - மான்சி ஜோஷி

சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!