மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசனின் நாளை அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே இந்த சீசனில் தலா 10 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றிருப்பதால், இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுக்கு இடையே, பிளே ஆஃபுக்கு 4வது அணியாக தகுதிபெற போட்டி நிலவுகிறது. எனவே மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய 2 அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்.
பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் மாற்றத்திற்கான அவசியம் இல்லை.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஹர்ப்ரீத் ப்ரார், ரவி பிஷ்னோய், ஷமி, நேதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.
