Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை செய்த பஞ்சாப் பவுலர்

சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

mujeeb ur rahman registered worst record in ipl history
Author
India, First Published Apr 30, 2019, 4:55 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியை 167 ரன்களில் சுருட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி அபாரமாக பேட்டிங் ஆடியது. வார்னரும் சஹாவும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வில்லியம்சனும் முகமது நபியும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 

பஞ்சாப் அணியின் நட்சத்திர பவுலரான முஜீபுர் ரஹ்மானின் பவுலிங்கை சன்ரைசர்ஸ் வீரர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக்கொடுத்தார் முஜீபுர். 4வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்த முஜீபுர் ரஹ்மானின் 18வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் எடுக்கப்பட்டது. 

mujeeb ur rahman registered worst record in ipl history

முஜீபுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 66 ரன்களை வாரி வழங்கியதுதான் இந்த சீசனின் மோசமான பவுலிங். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இதுதான் இரண்டாவது மோசமான பவுலிங். 2013ல் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இஷாந்த் சர்மாவும் 66 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே இரண்டாவது இடத்தை இஷாந்த் சர்மாவுடன் பகிர்ந்துள்ளார் முஜீபுர். இந்திய பவுலர் பாசில் தம்பி ஒரு இன்னிங்ஸில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios