சென்னை வந்த தோனி தற்போது சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவீந்திர ஜடேஜாவின் கடைசி நிமிட த்ரில் பேட்டிங்கின் காரணமாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனானது. இந்த சீசனில் முழங்கால் வலியோடு அவதிப்பட்டு வந்த தோனி ஒரு வழியாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு தற்போது 17ஆவது சீசனுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த எம்.எஸ்.தோனி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இதற்காக தோனி தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து பேருந்தில் மைதானத்திற்கு வந்த போது வழி நெடுகிலும் தோனியை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களை கண்ட தோனி அவர்களுக்கு டாட்டா காண்பித்த காட்சி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.

Scroll to load tweet…

இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியே சென்னையில் நடக்கிறது எனும் போது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதோடு, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது இன்னும் கூடுதலான கொண்டாட்டம். தான். முதல் போட்டியில் சிஎஸ்கே அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், முச்தாபிஜூர் ரஹ்மான், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி ஆகியோர் இந்த சீசனில் இடம் பெற்றுள்ளனர்.

Scroll to load tweet…