Asianet News TamilAsianet News Tamil

புதிய சீசன்... சிஎஸ்கே அணியில் புதிய ரோல்... தோனி வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு!

'புதிய சீசன்' பற்றிய குறிப்பு 2024 ஐபிஎல் தொடரைத்தான் குறிக்கிறதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், ரசிகர்களிடையே பரவலான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி இருப்பது தோனியின் 'புதிய ரோல்' என்ன என்பதுதான்.

MS Dhoni's cryptic 'new season-new role' IPL post adds suspense to CSK future sgb
Author
First Published Mar 4, 2024, 8:30 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி வரும் புதிய ஐபிஎல் சீசனில் தனது புதிய பாத்திரம் பற்றிய முகிகய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புதிரான அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

"புதிய சீசன் மற்றும் புதிய ரோல்... காத்திருங்கள்!" என்று தோனி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வரவிருக்கும் ஐபிஎல்லில் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

'புதிய சீசன்' பற்றிய குறிப்பு 2024 ஐபிஎல் தொடரைத்தான் குறிக்கிறதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், ரசிகர்களிடையே பரவலான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி இருப்பது தோனியின் 'புதிய ரோல்' என்ன என்பதுதான்.

பைக் விபத்தில் சிக்கிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராபின் மின்ஸ் – பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியனான சிஎஸ்கே மார்ச் 22ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஐந்து முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த கேப்டன் தோனி, கடந்த ஆண்டு பெற்ற வெற்றிக்குப் பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும்  விளையாடவில்லை.அடுத்த சீசனுக்காக சென்னையில் சிஎஸ்கே அணியின் முகாம் மார்ச் 2ஆம் தேதி தொடங்கியுள்ளது. முகாமில் கேப்டன் தோனி எப்போது இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் அவரது புதிரான அறிவிப்பு வந்துள்ளது.

2023இல் ஐபிஎல் கோப்பையை வென்ற உடனேயே தோனி, இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மும்பையில்  உள்ள அம்பானி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஐபிஎல் 2023 இல் தோனி பெரும்பாலும் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில்தான் பேட்டிங் செய்தார். ஆனால், 12 இன்னிங்ஸ்களில் 182.45 ஸ்ட்ரைக்-ரேட்டில் 104 ரன்கள் எடுத்தார்.

வெள்ளத்தின் வந்தபோது மீடியா மேனேஜ்மெண்ட் செய்த திமுக: சென்னையில் பிரதமர் மோடி ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios