வெள்ளத்தின் வந்தபோது மீடியா மேனேஜ்மெண்ட் செய்த திமுக: சென்னையில் பிரதமர் மோடி ஆவேசம்

ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் மக்களால் உற்சாகமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். வர்த்தகம் மற்றும் பாரம்பரியத்தில் சென்னை சிறந்து விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.

Every time I come to Chennai, I feel energised by the people: PM Modi addresses a public meeting in Chennai sgb

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி நந்தனம் மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கை வலியுறுத்திப் பேசிய பிரதமர், திமுக அரசு மக்களை ஏமாற்றி நலத்திடங்களுக்கு வழங்கும் பணத்தைக் கொள்ளை அடிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் கூறியதாவது:

- சென்னை தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் மக்களைப் பார்த்து உற்சாகமாக உணர்கிறேன். இந்த நகரில் இருப்பது பெருமைக்கு உரியது. சென்னை வர்த்தகம் மற்றும் பாரம்பரியத்தின் சிறந்த மையமாக விளங்குகிறது. வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் பணியில், சென்னை மக்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள்.

- என் மீதான உங்கள் அன்பு மிகவும் பழமையானது, ஆனால் சமீப வருடங்களில் நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு காரணமாக அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

மோடிக்கு குடும்பமே இல்லை.. 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் தான்.. லாலுவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.!

- தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளின்போது வெள்ளநீர் மேலாண்மையை திமுக அரசு சரியாக செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதைக விட்டுவிட்டு, ஊடகங்களைச் சரிகட்டும் மீடியா மேனேஜ்மெண்டில் திமுக அரசு ஈடுபட்டிருந்தது. திமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத் தான் செய்துவருகிறது.

- 'விக்சித் பாரத்' உடன், 'விக்சித் தமிழ்நாடு' என்ற தீர்மானத்தையும் மோடி அரசு முன்னெடுத்துள்ளது. விரைவில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற வேண்டும்... சென்னை போன்ற நகரங்களை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பாடுபடுகிறது.

- வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் திட்டத்தை மத்திய அரசு கொண்டுந்துள்ளது.  இதன் மூலம் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் இலவசமாகவே கிடைக்கும் என்றும் இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

- திமுகவும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் குடும்பத்துக்கு முன்னுரிமை என்கின்றன. ஆனால், மோடி சொல்றேன், - தேசத்திற்கே முன்னுரிமை. இதனால்தான் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எனக்கு குடும்பம் இல்லை என்று வசைபாடுகிறார்கள். ஆனால், என் குடும்பம் நீங்கள் தான். தேசத்தின் விவசாயிகளும், ஏழை மக்களும்தான் என் சொந்தங்கள். அவர்களின் நலனுக்காகவே என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.

- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஊழலில் ஊறிப்போய், குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளன. இன்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பால் அவர்கள் கப்பல் கவிழ்ந்துவிட்டபோது போல சோகத்தில் இருக்கிறார்கள். குடும்ப அரசியல் செய்யும் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் இன்று உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் ஒருவர் இன்னும் தமிழ்நாட்டில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்.

- மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது. இது குறித்த கவலை என் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? இது இன்றைய தலைமுறையை மட்டுமல்லாமல், நாளைய தலைமுறையையும் பாதிக்கும். பாஜவுக்கு ஆதரவு அளித்தால் தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மோடி உங்களுக்கு அளிக்கும் கேரண்டி.

முன்னதாக, கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் ஈரணு உலை திட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின் கார் மூலம் வந்து நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அடேங்கப்பா... ஆனந்த் அம்பானி வாட்ச்சைப் பார்த்து வியந்த மார்க் ஜூக்கர்பெக், பிரிசில்லா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios