அடேங்கப்பா... ஆனந்த் அம்பானி வாட்ச்சைப் பார்த்து வியந்த மார்க் ஜூக்கர்பெக், பிரிசில்லா!

பிரிசில்லா சான் ஆனந்த் அம்பானியின் கையைப் பிடித்து வாட்சைப் பார்க்கும் காட்சியும், ஜூக்கர்பெர்க், பிரிசில்லா ஆனந்த் அம்பானி மூவரும் வாட்சைப் பற்றி விவாதிப்பதும் வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

When Mark Zuckerberg wife Priscilla Chan got impressed by Anant Ambani watch sgb

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது திருமணக் கொண்டாட்டத்தின் போது கட்டியிருந்த விலை உயர்ந்த வாட்ச் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கை வியக்க வைத்துள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த வரும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம், ஜாம் நகரில் மார்ச் 1 முதல் 3 வரை நடந்தது.

திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற சர்வதேச நிறுனவங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஜூக்கர்பெர்க் மனைவி பிரிசில்லா சான்னுடன் கலந்துகொண்டிருக்கிறார்.

அம்பானி மகன் வெயிட் போட்டது ஏன்? 108 கிலோ உடம்புடன் போராடும் ஆனந்த் அம்பானியின் கதை!

இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வாட்ச் விருந்தினர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் இருவரும் ஆனந்த் கட்டியிருக்கும் வாட்சைப் பார்த்து அடேங்கப்பா என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வு மார்ச் 1ஆம் தேதி நடந்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பிரிசில்லா சான் ஆனந்த் அம்பானியின் கையைப் பிடித்து வாட்சைப் பார்க்கும் காட்சியும், ஜூக்கர்பெர்க், பிரிசில்லா ஆனந்த் அம்பானி மூவரும் வாட்சைப் பற்றி விவாதிப்பதும் வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வாட்ச் ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் தயாரிப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாகவே ஆனந்த் அம்பானி திருமணக் கொண்டாட்டம் குறித்த செய்திகள் அதிகமாகப் பரவி வருகின்றன. லேட்டஸ்ட்டாக இந்த வாட்ச் வீடியோ பிரபலமாகி இருக்கிறது.

காணாமல்போய் 10 வருஷம் ஆனா என்ன... மீண்டும் விமானத்தைத் தேடுவோம்: மலேசிய பிரதமர் உறுதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios