உங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த கிஃப்ட் எது..? தோனியின் டபுள் மீனிங் பதில்.. இணையத்தில் வைரல்
உங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த கிஃப்ட் எது என்ற கேள்விக்கு தோனி நீண்டநேரம் யோசிக்க, தொகுப்பாளரே ஒரு க்ளூ கொடுக்க, அதற்கு தோனி அளித்த பதில் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் லெவலில் இருப்பவர். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.
3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் தோனி. தோனி பேட்டிங்கில் ஃபினிஷிங், விக்கெட் கீப்பிங் மற்றும் சாமர்த்தியமான கேப்டன்சி ஆகியவற்றிற்கு பெயர்போனவர். அவரது துறைகள் அனைத்திலும் அசத்தியவர்.
இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்
களத்தில் சாமர்த்தியமாக சிந்தித்து தனது சமயோசித புத்தியால் வீரர்களுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி எதிரணிகளை வீழ்த்திய தோனி, களத்திற்கு வெளியேயும் மிகவும் சாமர்த்தியமானவர்.
குதூர்க்கமாகவோ அல்லது அவரை வெறுப்பேற்றும் விதமாகவோ பிரஸ் மீட்டில் ரிப்போர்ட்டர்கள் கேள்வி கேட்டால், அதற்கு டென்சன் ஆகாமல் கோபப்படாமல் தனது சமயோசித புத்தியால் சாமர்த்தியமான மற்றும் வித்தியாசமான பதில்களால் கேள்வி கேட்பவர்களின் வாயை அடைப்பவர் தோனி.
அதுமாதிரியான சம்பவங்களை தோனி ஆடிய காலத்தில் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்நிலையில், இப்போது அவர் கூறிய பதில் ஒன்று வைரலாகிவருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம், தொகுப்பாளர் மந்த்ரா பேடி, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த கிஃப்ட் எது என்று கேட்டார்.
இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி
அந்த கேள்விக்கு பதிலளிக்க நீண்ட நேரம் யோசித்தார் தோனி. உங்களுக்கு நான் வேண்டுமானால் உதவி செய்கிறேன் என்ற மந்த்ரா பேடி, உங்கள் (தோனி) மகள் என்றார். கண்டிப்பாக இல்லை என்ற தோனி, என் மகள் கடின உழைப்பின் மூலம் கிடைத்தவள்.. கிஃப்ட் என்றால் மற்றவர்கள் கொடுக்கவேண்டும் என்றார்.
தோனியின் பதிலில் இருந்த உள்ளர்த்தத்தை நினைத்து அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அதைக்கண்ட நெட்டிசன்களும் ரசிகர்களுமே சிரித்துவருகின்றனர். இப்படியாக அனைவரையும் சிரிக்கவைத்த அந்த வீடியோ இதோ..