MS Dhoni Video: லியோ பட ஸ்டைலில் தோனி - சிஎஸ்கே செஞ்ச தரமான சம்பவம்-வைரலாகும் வீடியோ!
லியோ பட காட்சி போன்று தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வீடியோ வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
“A gift for the fans.” - THA7A FOREVER! 🦁💛#Dencoming #WhistlePodu pic.twitter.com/pg0Rmg54WR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024
ஏற்கனவே சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயிற்சியை தொடங்கிய நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 3 நாட்கள் நடந்த அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் போட்டோஷுட் நிகழ்ச்சியில் தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்ட தோனி தற்போது சென்னை வந்துள்ளார்.
ஏற்கனவே வரும் வாரத்தின் தொடக்கத்தில் தோனி சென்னை வந்து தனது பயிற்சியை தொட்ங்க இருக்கிறார் என்று ஏசியாநெட் நியூஸ் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை வந்த தோனிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதன்படி, விஜய் நடிப்பில் திரைக்கு வந்த லியோ படம் காட்சி போன்று தோனிக்கு காட்சி உருவாக்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
லியோ பட காட்சிகள் போன்று தோனியின் புகைப்படத்தை செல்போனில் போட்டோ எடுத்து சிங்கம் போன்று உடை அணிந்திருப்பவரிடம் காட்டுகிறார். அவர், தோனியின் பழை புகைப்படத்தை எடுத்து, கண்ணாடிய உடைத்து தோனிக்கு முடி வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்று ஓவியம் வரைந்து, வந்திருப்பவர் பழைய தோனி தானா? என்பதை பார்க்கும் வகையில் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே தோனி நியூ சீசன், நியூ ரோலுக்காக காத்திருக்க முடியாது என்று கூறி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால், என்ன ரோல் என்பது குறித்து தெரிவிக்காத நிலையில், அவர், பயிற்சியாளராவோ அல்லது ஆலோசகராகவோ அணியில் இடம் பெறலாம். இல்லையென்றால், கேப்டன் மாற்றப்பட்டிருக்கலாம். அப்படியும் இல்லை என்றால், தோனியின் உடல்நிலை மற்றும் வயது, முழங்கால் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக தோனி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், தோனியின் நியூ ரோல் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வரும் 22 ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.