IPL 2023: பவர்ப்ளேயிலேயே பாதி டீம் காலி.. முகமது ஷமி அபார சாதனை..! டெல்லி கேபிடள்ஸ் மட்டமான பேட்டிங்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி பவர்ப்ளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதில் 4 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 

mohammed shami demolishes half of the delhi capitals team in poweplay itself in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடைசி இடத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், ரிப்பல் படேல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்

குஜராத் டைட்டன்ஸ் அணி: 

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஃபிலிப் சால்ட்டை டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது ஷமி. அதன்பின்னர் கேப்டன் டேவிட் வார்னரும் 2 ரன்னுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் ரைலீ ரூசோ(8), மனீஷ் பாண்டே(1) மற்றும் பிரியம் கர்க்(10) ஆகிய மூவரையும் பவர்ப்ளேயிலேயே வீழ்த்தி, ஆட்டத்தின் முடிவை ஆறு ஓவருக்குள்ளாகவே உறுதி செய்துவிட்டார் முகமது ஷமி.  ஷமியின் அபாரமான பவுலிங்கால் 23 ரன்களுக்கே டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

இந்த போட்டியில் பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஷமி(12) திகழ்கிறார். இந்த பட்டியலில் 8 விக்கெட்டுகளுடன் முகமது சிராஜ் 2வது இடத்திலும், 7 விக்கெட்டுகளுடன் டிரெண்ட் போல்ட் 3ம் இடத்திலும் உள்ளனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios