ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகாமல், காயத்திலிருந்து மீண்டதும் உடனடியாக ஐபிஎல்லில் ஆட வந்ததற்காக ஜோஷ் ஹேசில்வுட்டை விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
 

michael clarke slams josh hazlewood for playing in ipl 2023 not preparing for ashes test series

ஐபிஎல் உலகின் பணக்கார டி20 லீக் தொடர் ஆகும். உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், டி20 லீக் தொடர் தான் பணக்கார லீக் என்பதால் சர்வதேச வீரர்கள் அனைவரும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். 

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தங்கள் தேசிய அணிக்காக ஆட வேண்டியிருந்தாலும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். வெறும் இரண்டே மாதத்திற்கு கோடிகளில் ஊதியம் பெறுவதால் அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அவர்களால் ஐபிஎல்லில் வழங்கப்படும் ஊதியத்தை வழங்க முடியாது என்பதால் ஐபிஎல்லில் ஆட அனுமதிக்கின்றன.

சில அணிகள் மட்டும் முக்கியமான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருக்கும்பட்சத்தில், முக்கியமான வீரர்களை ஐபிஎல்லில் ஆட அனுமதிப்பதில்லை. ஐபிஎல்லில் காசுக்காக முழுவதுமாக ஆடிவிட்டு, பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவிற்காக ஆடும்போது ஓய்வெடுத்து கொள்வதாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மீதே விமர்சனங்கள் இருக்கின்றன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்திலிருந்து மீண்டு நேரடியாக ஐபிஎல்லில் ஆட வந்ததை மைக்கேல் கிளார்க் விமர்சித்துள்ளார். 

காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஆடிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஜோஷ் ஹேசில்வுட், காயத்திலிருந்து மீண்டு வந்ததால் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் முதல் சில போட்டிகளில் ஆடவில்லை. காயத்திலிருந்து மீண்டதும், ஆர்சிபி அணியில் இணைந்து லக்னோவிற்கு எதிரான போட்டியில் ஆடினார். 

ஐபிஎல் மே 28ம் தேதி முடியும் நிலையில், ஜூன் 7ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து உடனடியாக ஜூன் 16ம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. அப்படியிருக்கையில், அந்த முக்கியமான டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகாமல் ஐபிஎல்லில் ஆட வந்ததற்காக ஹேசில்வுட்டை சாடியுள்ளார் மைக்கேல் கிளார்க். ஆனால் ஐபிஎல்லில் ஆட வீரர்கள் காட்டும் ஆர்வத்தில் இருக்கும் நியாயத்தையும், எதார்த்தையும் சுட்டிக்காட்டியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

IPL 2023: 10 ஆண்டுக்கு பின் மீண்டும் களத்தில் மோதிக்கொண்ட கம்பீர் - கோலி..! 2 பேருக்கும் அப்படி என்னதான் பகை.?

இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க், ஹேசில்வுட் ஏன் ஐபிஎல்லில் ஆடவந்தார்..? காயத்திலிருந்து மீண்ட அவர், ஆஸ்திரேலியாவிலேயே இருந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியதுதானே..? அவர் ஐபிஎல்லில் வீசும் 3-4 ஓவர்கள் மூலமாக ஆஷஸ் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராக முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. அவர் காயத்திலிருந்து மீண்டு வந்தது சந்தோஷம் தான். ஆனால் ஆஷஸ் தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சை பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஐபிஎல்லில் வெறும் 8 வாரங்கள் ஆடுவதற்கு கொடுக்கப்படும் தொகையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கொடுத்து பயிற்சியில் ஈடுபடுங்கள் என்று சொல்ல முடியாது. அந்தளவிற்கான தொகையை கொடுக்க முடியாது. மேலும் இந்தியாவின் ஆஃபரை ஏற்க மறுக்க முடியாது என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios