Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை: ஃபார்மில் இல்லாத விராட் கோலி..! முகமது அசாருதீன் கருத்து

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஃபார்மில் இல்லாத விராட் கோலி குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து கூறியுள்ளார்.
 

mohammed azharuddin speaks about out of form virat kohli ahead of asia cup 2022
Author
First Published Aug 25, 2022, 9:02 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது. 

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஆனால் கோலி ஸ்கோர் செய்யாவிட்டாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கான பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் உள்ளது. ஆனால் கோலி நன்றாக ஆடினால் அந்த போட்டி வேற லெவலில் இருக்கும். கோலி ஸ்கோர் செய்தால் இந்தியா ஜெயித்துவிடும். எனவே ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வருவது இந்தியாவிற்கு முக்கியம்.

விராட் கோலி ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இளம் வீரர்கள் அபாரமாக ஆடிவரும் நிலையில், விராட் கோலி சரியாக ஆடாவிட்டாலும், அவரது பெயருக்காக அவரை ஆடும் லெவனில்  வைத்திருப்பது அணிக்கு பாதகமாக அமையும்.

அதனால் விராட் கோலி ஆசிய கோப்பையிலும் சரியாக ஆடாதபட்சத்தில் அவரை டி20  உலக கோப்பையில் ஆடவைப்பதவிட, அவரது இடத்தில் ஃபார்மில் உள்ள ஒரு இளம் வீரரை இறக்கலாம் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. எனவே விராட் கோலிக்கு ஆசிய கோப்பை தொடர் வாழ்வா சாவா தொடர் ஆகும்.

விராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடுவதை பொறுத்துத்தான் டி20 உலக கோப்பைக்கான அணியில் அவரை தேர்வு செய்ய முடியும் என்று அணி தேர்வாளர் ஒருவர் அண்மையில் கூறியிருக்கிறார்.  அந்தளவிற்கு விராட் கோலியின் நிலை மோசமாகியுள்ளது. விராட் கோலியின் ஃபார்ம் பற்றித்தான் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

வரும் 28ம் தேதி இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் நிலையில், ஃபார்மில் இல்லாத விராட் கோலி குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து கூறியுள்ளார். 

இதையும் படிங்க - Asia Cup:இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலா கண்டிப்பா அவரைத்தான் எடுத்திருக்கணும்! லக்‌ஷ்மிபதி பாலாஜி விளாசல்

விராட் கோலியின் பெயரை குறிப்பிடாமல், ஆனால் அவரைப்பற்றி டுவீட் செய்த முகமது அசாருதீன்,  அவுட் ஆஃப் ஃபார்ம் என்ற வாக்கியம், எப்பேர்ப்பட்ட வீரர் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தும். எந்தவித எதிர்பார்ப்பும், அனுமானங்களும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விடுங்கள் என்று அசாருதீன் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios