Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி டிராபியில் முத்திரை பதிக்கும் முகமது ஷமியின் சகோதரர் முகமது கைஃப் – 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்!

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் ஷமியின் சகோதரர் முகமது கைப் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Mohammad Shami Brother Mohammad Kaif Entered into Ranji Trophy and to take 7 wickets for bengal team against Uttar Pradesh Team rsk
Author
First Published Jan 16, 2024, 12:52 PM IST | Last Updated Jan 16, 2024, 12:52 PM IST

இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய ஷமிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

404 அடிச்சும் நாட் அவுட்; யுவராஜ் சிங்கின் 24 வருட சாதனை முறியடிப்பு – 18 வயது வீரரின் சாதனை!

தற்போது முகமது ஷமி காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. வரும் 25 ஆம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை. எப்படி உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினாரோ, அதே போன்று அவரது சகோதரரான முகமது கைஃப்பும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். விரைவில் இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ள அழைப்பு!

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் உத்திரப்பிரதேச அணியும், பெங்கால் அணியும் மோதின. இதில், பெங்கால் அணியில் இடம் பெற்ற முகமது கைஃப் 5.5 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக உத்திரப்பிரதேச அணியானது 60 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து பெங்கால் அணி விளையாடியது.

அப்போது களமிறங்கிய முகமது கைஃப் சிறப்பாக பேட்டிங் செய்து 79 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 45 ரன்கள் குவித்தார். இதையடுத்து உத்தரப்பிரதேச அணி 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. மீண்டும் பந்து வீச வந்த கைஃப் 19 ஓவர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தப் போட்டியானது சமன் செய்யப்பட்டது.

மஹாகாலேஷ்வர் கோயிலில் பாஸ்ம ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ!

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசிய தனது சகோதரர் கைஃப் குறித்து பேசிய ஷமி கூறியிருப்பதாவது: இது மிகப்பெரிய சாதனை. சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். கடின உழைப்பை மட்டுமே கொடுத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று ஷமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios