அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ள அழைப்பு!

ராமர் கோவில் கும்பாபிஷேக வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Former Indian Skipper MS Dhoni got the invitation for the Ram Temple Pran Pratishtha at Ayodhya rsk

உத்திர பிரதேசத்தில், கட்டப்பட்டு வந்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர், மற்றும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

மஹாகாலேஷ்வர் கோயிலில் பாஸ்ம ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ!

முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, ரஜினிகாந்த் என்று பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கோயிலை திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் நாடு முழுவதும் 7,000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பூரி ஜெகநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இத்தாலி ஹாக்கி வீராங்கனைகள்!

அன்றைய தினம் கோயில் கருவறையில் ராம் லல்லா (ராமரின் குழந்தை வடிவம்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்த வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மக்களை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளை பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.

ஆன்லைன் கேம் ஆப் மூலமாக எனது மகள் தினமும் ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறாள் – சச்சினின் டீப் ஃபேக் வீடியோ வைரல்!

இந்த நிலையில் தான் தற்போது இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனிக்கு  கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios