ஆன்லைன் கேம் மூலமாக தனது மகள் நாள்தோறும் ரூ.1.8 லட்சம் வரையில் சம்பாதிக்கிறாள் என்று சச்சின் கூறுவது போன்ற டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டீப் ஃபேக் வீடியோ தொழில்நுட்பம் சினிமா முதல் கிரிக்கெட் வரையில் பல பிரபலங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீப் ஃபேக் வீடியோ பிரச்சனையால் தற்போது சச்சின் டெண்டுல்கரும் பாதிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ (Deep Fake Video) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fake, Deep Fake Video – தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சச்சின் ஆதங்கம்!

அந்த டீப் ஃபேக் வீடியோவில், ஆன்லைன் கேம் ஆப் மூலமாக தனது மகள் சாரா நாள்தோறும் ரூ.1.8. லட்சம் வரையில் சம்பாதிக்கிறாள். ஆதலால் அந்த ஆப்பை அனைவரும் பயன்படுத்துமாறு வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர் இது போலியானது.

ஒரு வெற்றிக்கு பிறகு மீண்டும் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ் – 9 தோல்வியுடன் 11ஆவது இடம்!

தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை யாரேனும் பார்த்தால், உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Rohit Sharma Captain: ஒரு கேப்டனாக குறைவான போட்டியிலேயே தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Scroll to load tweet…