மஹாகாலேஷ்வர் கோயிலில் பாஸ்ம ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஜித்தேஷ் சர்மா, ரவி பிஷ்னாய் ஆகியோர் மஹாகாலேஷ்வர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Tilak Varma, Ravi Bishnoi, Jitesh Sharma, Washington Sundar are offer Prayers at Ujjain Mahakaleshwar Temple, Bhasma Aarti rsk

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் குல்பதீன் நைப் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 57 ரன்களில் ஆட்டமிழக்க, நஜிபுல்லா ஜத்ரன் (24), கரீம் ஜனத் (20), முஜீப் உர் ரஹ்மான் (21) என்று ஓரளவு ரன்கள் சேர்க்கவே 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் குவித்தது.

பூரி ஜெகநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இத்தாலி ஹாக்கி வீராங்கனைகள்!

பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி ரன்கள் குவித்தனர். முகமது நபி வீசிய ஒரு ஓவரில் மட்டும் ஷிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார்.

ஆன்லைன் கேம் ஆப் மூலமாக எனது மகள் தினமும் ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறாள் – சச்சினின் டீப் ஃபேக் வீடியோ வைரல்!

Tilak Varma, Ravi Bishnoi, Jitesh Sharma, Washington Sundar are offer Prayers at Ujjain Mahakaleshwar Temple, Bhasma Aarti rsk

ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரால் இந்த அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 10 ஓவர்களில் 116 ரன்கள் குவித்தது. அடுத்த 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 50 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெஸ்வால் 34 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்தார்.

Fake, Deep Fake Video – தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சச்சின் ஆதங்கம்!

இறுதியாக இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 17 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

Tilak Varma, Ravi Bishnoi, Jitesh Sharma, Washington Sundar are offer Prayers at Ujjain Mahakaleshwar Temple, Bhasma Aarti rsk

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் இந்திய அணி வீரர்களான திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஜித்தேஷ் சர்மா, ரவி பிஷ்னாய் ஆகியோர் பாஸ்ம ஆர்த்தி தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். பாஸ்ம ஆர்த்தி என்பது, இந்த கோயிலில் செய்யப்படும் தனித்துவமான சடங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வெற்றிக்கு பிறகு மீண்டும் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ் – 9 தோல்வியுடன் 11ஆவது இடம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios