Asianet News TamilAsianet News Tamil

டி20 போட்டி தொடங்குவதற்கு சரியாக 1 மணி நேரத்துக்கு முன்னதாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முகமது ரிஸ்வான்!

கோமில்லா விக்டோரியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.

Mohammad Rizwan landed in a helicopter exactly 1 hour before the start of the BPL T20 match
Author
First Published Jan 15, 2023, 10:06 AM IST

வங்கதேசத்தில் 9ஆவது சீசனுக்கான வங்கதேச பிரீமியர் லீக் டி20 தொடர் நடக்கிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி நடக்கிறது. இதில், மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ளன. தற்போது 4 போட்டிகளில் விளையாடியுள்ள சில்கெட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் கோமில்லா விக்டோரியன்ஸ் அணி உள்ளது. 3 போட்டியில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வியை கண்டுள்ளது.

BBL: 30 யார்டு வட்டத்தையே தாண்டாத பந்துக்கு சிக்ஸர் கொடுத்த அம்பயர்..! என்ன காரணம்..? வைரல் வீடியோ 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டெஸ்ட் போட்டி டிராவில் முடிய, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலமாக முதல் முறையாக பாகிஸ்தான் நாட்டில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி கடந்த 13 ஆம் தேதி முடிந்த நிலையில், நேற்று வங்கதேசத்தில் கோமில்லா விக்டோரியன்ஸ் மற்றும் பார்ச்சூன் பரிஷால் அணிக்கு இடையிலான 11ஆவது போட்டி நடந்தது.

Hockey World Cup 2023: கொரியாவை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி..! புள்ளி பட்டியல் அப்டேட்

இந்தப் போட்டிக்காக கோமில்லா விக்டோரியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கி போட்டியில் பங்கேற்றுள்ளார். டாஸ் வென்ற கோமில்லா விக்டோரியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பார்ச்சூன் பரிஷால் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதில், அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.

SA20: ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு அடுத்தடுத்த தோல்விகள்..! எம்.ஐ கேப்டவுன் அபார வெற்றி

இதையடுத்து 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட கோமில்லா விக்டோரியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து வங்கதேச நாட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கோமில்லா விக்டோரியன்ஸ் அணியில் விளையாடிய முகமது ரிஸ்வான் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கோமில்லா விக்டோரியன்ஸ் அணி தான் இந்த ஹெலிகாப்டர் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த 3 போட்டியிலும் கோமில்லா விக்டோரியன்ஸ் அணி 3 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios