Asianet News TamilAsianet News Tamil

BBL: 30 யார்டு வட்டத்தையே தாண்டாத பந்துக்கு சிக்ஸர் கொடுத்த அம்பயர்..! என்ன காரணம்..? வைரல் வீடியோ

பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் வீரர்கள் அடித்த 30 யார்டு வட்டத்தையே தாண்டாத 2 ஷாட்டுகளுக்கு அம்பயர் சிக்ஸர் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

umpire gives six for the ball which landing inside 30 yard circle in big bash league video goes viral
Author
First Published Jan 14, 2023, 10:23 PM IST

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் - மெல்பர்ன் ரெனெகேட்ஸ் இடையேயான போட்டி மெல்பர்ன் டாக்லேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. இது ஸ்டேடியம், ஓபன் ஸ்டேடியமாக இல்லாமல் மேலே ரூஃப் அமைந்திருக்கும்.

அதன்விளைவாக இந்த போட்டியில் வியப்பான சம்பவங்கள் நடந்தன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி வீரர் சாம் ஹார்ப்பெர் அரைசதம் அடித்து 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெல்ஸ் அடித்து ஆடி 24 பந்தில் 44 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி. 

U19 Womens T20 World Cup: ஷ்வேதா செராவத் அபார பேட்டிங்! தென்னாப்பிரிக்காவை அசால்ட்டா அடித்து காலிசெய்த இந்தியா

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 37 பந்தில் 59 ரன்கள் அடித்தார். பியூ வெப்ஸ்டெர் 18 பந்தில் 29 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் 20 ஓவரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 156 ரன்கள் அடித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

IND vs SL: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

இந்த போட்டியில் ஜோ கிளார்க் 3வது ஓவரில் காற்றில் தூக்கியடித்த ஒரு பந்து மேற்கூரை மீது தட்டி கீழே விழுந்தது. 30 யார்டு வட்டத்துக்குள்ளேயே விழுந்த அந்த பந்துக்கு அம்பயர் சிக்ஸர் கொடுத்தார். அந்த பந்து மேற்கூரையில் படாமல் இருந்திருந்தால் சிக்ஸருக்கு போயிருக்கும் என்ற கோணத்தில் அதற்கு சிக்ஸர் வழங்கப்பட்டது. அதே இன்னிங்ஸில் மிடில் ஆர்டர் வீரர் பியூ வெப்ஸ்டெர் 16வது ஓவரில் தூக்கியடித்த பந்து மீண்டும் மேற்கூரையில் பட, அதற்கும் சிக்ஸர் கொடுக்கப்பட்டது. அந்த பந்துக்கு டெட் பால் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு விவாதமும் உள்ளது. இது சர்ச்சைக்குள்ளான சம்பவமாகவும் அமைந்துள்ளது. வித்தியாசமான அந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios