ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. கோப்பையை வெல்வதை வாடிக்கையாக கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வான், மும்பை இந்தியன்ஸ் தான் கோப்பையை வெல்லும். ஒருவேளை வினோதமாக ஏதாவது நடந்து மும்பை இந்தியன்ஸ் சரியாக ஆடாமல் போனால், சன்ரைசர்ஸ் வெல்ல வாய்ப்புள்ளது என்றார் மைக்கேல் வான்.

ரோஹித் சர்மா என்ற சிறந்த கேப்டனின் கீழ், டி காக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு என அபாயகரமான பேட்டிங் ஆர்டரை கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. பவுலிங்கிலும் பும்ரா, டிரெண்ட் போல்ட், குல்ட்டர்நைல் என உலகத்தரம் வாய்ந்த பவுலிங் யூனிட்டை பெற்றுள்ள வலுவான அணி மும்பை இந்தியன்ஸ். 

கடந்த சீசனில் 5வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிதான், 6வது முறையாக கோப்பையை வெல்லும் என மைக்கேல் வான் கணித்துள்ளார்.