உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

1992ம் ஆண்டு உலக கோப்பையை போல இந்த முறை, அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பையில் விராட் கோலி, வில்லியம்சன், வார்னர், பேர்ஸ்டோ, பட்லர், ஸ்மித், ரோஹித் சர்மா, பும்ரா, ரஷீத் கான், ரபாடா என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், உலக கோப்பை 2019க்கான 11 வீரர்களை கொண்ட கனவு அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக பாகிஸ்தானின் ஷதாப் கான் மற்றும் இங்கிலாந்தின் அடில் ரஷீத் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோருடன் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸை தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக ரஷீத் கானை கனவு அணியில் எடுத்துள்ளார். 

மைக்கேல் வாஹன் தேர்வு செய்த கனவு உலக கோப்பை 2019 அணி:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, பாபர் அசாம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஷதாப் கான், பாட் கம்மின்ஸ், அடில் ரஷீத், பும்ரா, டிரெண்ட் போல்ட்.