Asianet News TamilAsianet News Tamil

2023 ODI உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொன்னா அது முட்டாள்தனம்.! ஓவரா மட்டம்தட்டும் மைக்கேல் வான்

2023ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்று யாராவது கூறினால் அது முட்டாள்தனம் என்றும், இங்கிலாந்து அணி தான் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் என்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் விமர்சித்துள்ளார்.
 

michael vaughan opines england will win 2023 odi world cup also which will be held at india
Author
First Published Nov 15, 2022, 6:08 PM IST

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து உலக கோப்பைகளை குவித்துவருகிறது இங்கிலாந்து அணி. அதேவேளையில், இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது. இந்திய அணி இருதரப்பு, முத்தரப்பு தொடர்களில் நன்றாக ஆடி வெற்றிகளை குவித்தாலும்,  ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவருகிறது.

இந்திய அணிக்கு 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் தோனி வென்று கொடுத்தார். கடைசியாக தோனியின் கேப்டன்சியில் 2013ல் வென்ற சாம்பியன்ஸ் டிராபிதான் கடைசி ஐசிசி டிராபி. அதன்பின்னர் இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.

இந்தியாவிற்கு எதிரான டி20 & ஒருநாள் தொடருக்கான நியூசி., அணி அறிவிப்பு.! 2 பெரிய தலைகளுக்கு அணியில் இடம் இல்லை

2014, 2016, 2021, 2022ம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பைகளில் தோல்வியை தழுவியது. 2015 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 தொடர்களிலும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்று தொடரை இழந்தது. 

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேற, ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்றது.

2015 ஒருநாள் உலக கோப்பைக்கு முன் விஸ்வரூபம் எடுத்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகவும் மிரட்டலான அணியாகவும் உருவெடுத்த இங்கிலாந்து, 2019 ஒருநாள் உலக கோப்பை, இந்த முறை டி20 உலக கோப்பை என உலக கோப்பைகளை குவித்துவருகிறது. 2015 ஒருநாள் உலக கோப்பையில் படுமோசமாக தோற்று வெளியேறியது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் கேப்டன் இயன் மோர்கன், அணியில் அதிகமான ஆல்ரவுண்டர்கள், டாப் ஆர்டர் அதிரடி, நல்ல ஸ்பின்னர்கள், தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் என சிறந்த வீரர்கள் அடங்கிய அணியை உருவாக்கியதுடன், அவர்களை எல்லாம் ஒரு அணியாக ஒன்றிணைத்து மிரட்டலான அணியை உருவாக்கினார். 2016லிருந்து அதிரடியான ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 2019ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றது. அதன்பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு டி20 உலக கோப்பையையும் வென்றுள்ளது.

ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், ஹாரி ப்ரூக், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் உட், ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத் என மிக மிக வலுவான அணியாக திகழும் இங்கிலாந்து அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளையும் கோப்பைகளையும் குவித்துவருகிறது.

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு..! மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கும் நிலையில், அந்த உலக கோப்பையையும் இங்கிலாந்து தான் வெல்லும் என்றும், அந்த உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி வெல்லும் என்று யாராவது கூறினால் அது முட்டாள்தனமானது என்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் வான்,  அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தான் அடுத்த பெரிய தொடர். இந்திய அணி நல்ல ஸ்பின் பவுலிங்கை பெற்றிருக்கிறது. மேலும் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று யாராவது கூறினால் அது முட்டாள்தனமானது. இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பையை வென்றுவிடும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணி தான் ஆதிக்கம்செலுத்தும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios