கேப்டன் என்பதால் ஓவரா அட்வாண்டேஜ் எடுத்த பாண்டியா – சைலண்டா வந்து விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 5ஆவது ஐபிஎல் போட்டியில் கேப்டன் என்பதால் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை போட்டு 11 ரன்கள் கொடுத்துள்ளார்.

MI Skipper Hardik Pandya Take advantage to bowl first over against GT, finally Jasprit Bumrah Take Saha Wickets in 5th Match of IPL 2024 rsk

அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 5ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Sanju Samson: கடைசி வரை போராடிய ராகுல் அண்ட் பூரன் – 20 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

கேப்டன் என்பதால் ஹர்திக் பாண்டியா முதல் ஓவர் வீசினார். முதல் பந்திலேயே விருத்திமான் சகா பவுண்டரி அடித்து பாண்டியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தார். 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4ஆவது பந்தில் சுப்மன் கில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள் எடுக்கப்பட்டது.

அடுத்த ஓவரை லூக் உட் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்தார். இந்த ஓவரில் சகா, அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். பாண்டியா வீசிய 2 ஓவரில் 20 ரன்கள் கொடுத்துள்ளார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பிறகு தான் நம்பிக்கை நாயகன் பூம் பூம் பும்ரா வந்தார். இந்த ஓவரில் 4ஆவது பந்தில் சகா பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் யார்க்கராக வீசி சகா விக்கெட்டை எடுத்தார்.

கேப்டனாக களமிறங்கும் சுப்மன் கில் – கம்பீர தோரணையுடன் டாஸ் போட வந்து வெற்றியோடு சென்ற ஹர்திக் பாண்டியா!

தற்போது வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இதுவரையில் 7 பவுலர்களை பயன்படுத்தியுள்ளார். இதில் ஹர்திக் பாண்டியா, லூக் உட், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, நமன் திர், ஜெரால்டு கோட்ஸி என்று வரிசையாக 7 பவுலர்கள் பந்து வீசியுள்ளனர்.

சஞ்சு சாம்சன், ரியான் பராக் அதிரடி காட்ட, 193 ரன்கள் குவித்த ஆர்ஆர் – பீல்டிங்கில் சொதப்பிய லக்னோ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios