Asianet News TamilAsianet News Tamil

கேப்டனாக களமிறங்கும் சுப்மன் கில் – கம்பீர தோரணையுடன் டாஸ் போட வந்து வெற்றியோடு சென்ற ஹர்திக் பாண்டியா!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 5ஆவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Mumbai Indians Won the Toss and Choose to Bowl first Against Gujarat Titans in 5th Match of IPL 2024 at Ahmedabad rsk
Author
First Published Mar 24, 2024, 7:17 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 5ஆவது போட்டி நடைபெறுகிறது. இதில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளின் கேப்டன்களும் மாற்றப்பட்ட நிலையில் இந்த சீசனில் மோதுகின்றன.'

சஞ்சு சாம்சன், ரியான் பராக் அதிரடி காட்ட, 193 ரன்கள் குவித்த ஆர்ஆர் – பீல்டிங்கில் சொதப்பிய லக்னோ!

இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், அஸ்மதுல்லா உமர்சாய் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷாம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி, ஜஸ்ப்ரித் பும்ரா, லூக் உட்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ரஷீத் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.

ஒரு கேப்டனாக எப்படி விளையாடனும் என்று வழிகாட்டிய சஞ்சு சாம்சன் – அரைசதம் அடித்த முதல் கேப்டன்!

குஜராத் அணியில் சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, விஜய் சங்கர், ரஷீத் கான் என்று முக்கிய வீரர்கள் இருக்கின்றனர். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ஜஸ்ப்ரித் பும்ரா என்று முக்கிய வீரர்கள் இருக்கின்றனர்.

இதுவரையில் இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டியிலும் குஜராத் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆதலால், இன்று நடக்கும் போட்டியும் குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

KKR vs SRH, IPL 2024: ஒரு விக்கெட் கூட இல்ல, 53 ரன்னு, ரூ.24.75 கோடிக்கு ஆப்பு வைக்கும் மிட்செல் ஸ்டார்க்!

மேலும், நரேந்திர மோடி மைதானத்தில் 10 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது, 6 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியனானது.

குஜராத் மற்றும் மும்பை போட்டி – 2023:

குஜராத் டைட்டன்ஸ்: அதிகபட்ச டீம் ஸ்கோர் 233/2 (20) – மும்பை இந்தியன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்: குறைந்தபட்ச ஸ்கோர் 125/6 (20) – டெல்லி கேபிடல்ஸ்

மும்பைக்கு எதிராக அதிக ரன்கள்:

சுப்மன் கில் – 4 போட்டிகள் – 243 ரன்கள்

டேவிட் மில்லர் – 3 போட்டிகள் – 106 ரன்கள்

குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள்:

சூர்யகுமார் யாதவ் – 4 போட்டிகள் – 200 ரன்கள்

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியல்:

ரஷீத் கான் – 4 போட்டிகள் – 10 விக்கெட்டுகள் – 4/30

மோகித் சர்மா- 3 போட்டிகள் – 8 விக்கெட்டுகள் – 5/10

பியூஷ் சாவ்லா – 3 போட்டிகள் – 2/34

Follow Us:
Download App:
  • android
  • ios