Asianet News TamilAsianet News Tamil

சூர்யகுமார் யாதவ் 6 தான், ஆனால், ரஷீத் கான் 10: போராடி தோற்ற குஜராத் டைட்டன்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

MI Beat GT by 27 Runs Difference in 57th IPL match at Wankhede Stadium Mumbai
Author
First Published May 13, 2023, 10:09 AM IST

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 57ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 61 ரன்கள் சேர்த்தனர்.

ஒரே நாளில் செலிபிரிட்டியான சிஎஸ்கே ரசிகை: சினிமா வாய்ப்பு வருமா?

அதன் பிறகு 6.1ஆவது ஓவரில் ரோகித் சர்மா 29 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். நேஹல் வதேராவும் ரஷீத் கான் சுழலில் சிக்கினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் விஷ்ணு வினோத் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். ஒரு கட்டத்தில் விஷ்ணு வினோத் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 5 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் பிளே ஆஃப் ரேஸ் - பிளே ஆஃப் யாருக்கெல்லாம் அமையும்? நம்பர் 1ல் குஜராத், நம்பர் 2ல் சென்னை!

ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முதல் சதத்தை அடிப்பாரா, மாட்டாரா என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள் விளாசி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். அவர் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 103 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி - பிளே ஆஃப் எப்படி? இன்னும் 2 போட்டி தான் இருக்கு!

பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா, கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கரும் 29 ரன்களில் வெளியேறினார். அபினவ் மனோகர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திவேதியா 14 ரன்களில் வெளியேறவே குஜராத் டைட்டன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ரஷீத் கான் தனது அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். அவர் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலமாக 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios