மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் மற்ற அணிகளான RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC என்று எல்லா அணிகளுக்கும் பிளே ஆஃப் தலைவலியை ஏற்படுத்தும்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 57ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும். ஒரு வேளை மும்பை இந்தியன்ஸ் மட்டும் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் என்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள மற்ற அணிகளுக்கு பெரும் தலைவலியாக அமையும்.
கமல் ஹாசனை மறைமுக சாடிய லட்சுமணன் சிவராமகிருஷ்ணனை விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகள் உடன் 4ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 11 புள்ளிகளுடன், ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், கொல்கத்தா 10 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் 8 புள்ளிகளுடன் 9 மற்றும் 10ஆவது இடத்தில் உள்ளன.
ஏற்கனவே குஜராத், சென்னை, ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகள் அதிக புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியில் மும்பை வென்றால் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடிக்கும். நாளைக்கு நடக்கும் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் 4ஆவது இடம் பிடிக்கும். இதனால் 5ஆவது இடத்திற்கு ஆர்ஆர் தள்ளப்படும். முதல் இரு இடங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மற்ற இரு இடங்களுக்கான ரேஸில் தான் மற்ற அணிகள் ஒவ்வொன்றும் கடுமையாக போராட்டி வருகின்றன. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
யஷஸ்வி ஜெய்ஷ்வால் 98 நாட் அவுட்; கொல்கத்தாவை வீழ்த்தி 3ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!