கமல் ஹாசனை மறைமுக சாடிய லட்சுமணன் சிவராமகிருஷ்ணனை விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!
கமல் ஹாசன் விளையாட்டை பின்பற்றவில்லை என்று கூறியதற்கு அவர் எல்லா காலத்திலும் சிறந்த நடிகர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான லட்சுமணன் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை லீலா பேலஸில், விளையாட்டுத்துறை சார்பில் பிரத்யேகமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது தம்ழிநாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஷ்வால் 98 நாட் அவுட்; கொல்கத்தாவை வீழ்த்தி 3ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே! என்ற பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு, வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் தோனி - ஹர்பஜன் சிங்!
ஆனால், சமீபத்தில் விளையாட்டை பின் தொடரவில்லை என்று கமல் ஹாசன் கூறியதற்கு அவர் எல்லா காலத்திலும் சிறந்த நடிகர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான லட்சுமணன் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார். லட்சுமணன் சிவராமகிருஷ்ணன் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதில், விளையாட்டு வீரர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்று தலைவர் கமல்ஹாசன் சொன்னதினால் விளையாட்டு துறைக்கு அரசு ஏற்படுத்திக்கொடுக்கும் நல்ல முயற்சிகளை பாராட்டக்கூடாதா? கமல் ஹாசன் திமுக குடும்பத்தின் கொத்தடிமை ஆச்சே. ஒருவருடைய “சிந்தனை”யும், “பேச்சு”ம் தான் வேறுபாடு. தன் துறையில் உயர்ந்தாலும் அவர் சிந்தனையில், பேச்சில் சிறந்த எண்ணதால் “sorry” சொன்னார்...
ஆனால் உங்கள் எண்ணம், பேச்சு ?
அய்யோ சிவ“ராமா”...