கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி - பிளே ஆஃப் எப்படி? இன்னும் 2 போட்டி தான் இருக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், கேகேஆருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
 

After Loss against Rajasthan Royals Then is it any possible to KKR entered into Play Off?

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56 ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்.ஆர். அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் ஆடியது. இதில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இணைந்து 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை ஜெயித்தால் RR, LSG, RCB, KKR, PBKS, SRH, DC எல்லாத்துக்கும் தலைவலி!

இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக கொல்கத்தா அணி 7ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. எனினும் கேகேஆர் அணிக்கு இன்னும் பிளே ஆஃப் சுற்று இருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பு. ஆம், வரும் 14 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 20 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளிலும் கொல்கத்தா அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் கொல்கத்தாவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறும். 

கமல் ஹாசனை மறைமுக சாடிய லட்சுமணன் சிவராமகிருஷ்ணனை விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!

ஆனால், இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை தனது 12 ஆவது போட்டியில் விளையாடுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன்  3ஆவது இடத்திற்கு முன்னேறும்.  அப்படி மும்பை முன்னேறிவிட்டால் மற்ற அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலை ஏற்படுத்தும். ஒரு வேளை இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுவிட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி சஹால் சாதனை; டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து முதலிடம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios