Asianet News TamilAsianet News Tamil

அவர்தான் உங்க எதிர்காலம்.. இந்திய அணியின் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஈசியா தீர்வு சொன்ன மேத்யூ ஹைடன்

தற்போதைய சூழலில் இந்திய அணிக்கு மிகப்பெரிய குழப்பமாக இருக்கும் விஷயத்திற்கு மேத்யூ ஹைடன் தீர்வு கூறியுள்ளார்.
 

matthew hayden opines rishabh pant should be in team india playing eleven
Author
First Published Sep 21, 2022, 6:11 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங்  ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.

இதையும் படிங்க - IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு அவங்கதான் காரணம்.! கேப்டன் ரோஹித் சர்மா கடும் தாக்கு

ஆனால் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதற்கு  முன் அவரை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசி 5 ஓவர்களில் அல்லது 10-15 பந்துகள் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. ஆட்டத்தை இக்கட்டான நிலையிலிருந்து கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவர் தான் ஃபினிஷர் தானே, கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட் ஆடி ஃபினிஷிங் டச் கொடுப்பவர் ஃபினிஷர் அல்ல என்ற விமர்சனம் எழுந்தது.

ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்களும், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்தனர். டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இருவரில் ஒருவரை இந்திய அணி ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இருவரையும் மாற்றி மாற்றி இறக்கிவிட்டு, ஒரு தெளிவில்லாத சூழலை உருவாக்கி, அவர்கள் இருவருக்கும் குழப்பதை  ஏற்படுத்தி அணி நிர்வாகமும் குழப்பமடைகிறது.

ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டிவிட்டு ரிஷப் பண்ட்டை ஆடவைத்தது. இடையில் சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், கடைசி 5 இன்னிங்ஸ்களில் சொதப்பியுள்ளார். ரிஷப் பண்ட்டும் நம்பிக்கையுடன் ஆடாமல் சொதப்பிவருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக ஆடினார். ஆனால் அவர் 5 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையும் படிங்க - ஆஸி.,க்கு எதிராக 208 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்..! ரவி சாஸ்திரி விளாசல்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன், நான் தேர்வாளராக இருந்தால் எந்தமாதிரியான அணியின் ஆடும் லெவனிலும் கண்டிப்பாக ரிஷப் பண்ட்டை எடுப்பேன். அவர்தான் எதிர்காலம். அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கவேண்டும். அவர் ஸ்கோர் செய்தாலும் செய்யாவிட்டாலும், ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி.. அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios