Asianet News TamilAsianet News Tamil

கப்டில் காட்டடி; வெறும் ஏழே ரன்னில் சதத்தை தவறவிட்ட பரிதாபம்! ஸ்காட்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த நியூசி.,

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மார்டின் கப்டிலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 173 ரன்கள் என்ற கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

martin guptill super knock helps new zealand to set tough target to scotland in t20 world  cup
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 3, 2021, 5:42 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் சேர்த்து இந்திய அணிக்கும் உள்ளது.

இந்நிலையில், துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்தும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இதையும் படிங்க - ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் கடும் எச்சரிக்கை..! நீங்க சொல்றது வாஸ்தவம் தான் பாஜி

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல். 

இதையும் படிங்க - ஐபிஎல் 2022: ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்..! மெகா ஏலத்துக்கு முன் பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் கேப்டன் கேன் வில்லியம்சன் டக் அவுட்டானார். டெவான் கான்வேவும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 52 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்ற மார்டின் கப்டிலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடினார் க்ளென் ஃபிலிப்ஸ். களத்தில் நிலைத்த பின்னர் 10 ஓவருக்கு பிறகு சிக்ஸர்களாக விளாசி தெறிக்கவிட்டார் மார்டின் கப்டில்.

martin guptill super knock helps new zealand to set tough target to scotland in t20 world  cup

காட்டடி அடித்து சதத்தை நெருங்கிய கப்டில், 93 ரன்னில் ஆட்டமிழந்து வெறும் ஏழே ரன்னில் சதத்தை தவறவிட்டார். 56 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கப்டில். ஃபிலிப்ஸ் 33 ரன்கள் அடித்தார். கப்டிலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 173 ரன்கள் என்ற கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

Follow Us:
Download App:
  • android
  • ios