Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார்.
 

ben stokes predicts the finalists of  t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 30, 2021, 3:00 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பார்க்கப்பட்டன. பாகிஸ்தான் அணிக்கு அமீரக மைதானங்கள் ஹோம் மைதானங்கள் என்பதால், அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்றவகையிலும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவாக இருக்கிறது என்றவகையிலும் பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்டது.

சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் சிறப்பாக ஆடி, இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ளன. 

இதையும் படிங்க - இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணி மட்டும் தான் இதுவரை அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக ஆடிய போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, அரையிறுதியில் ஒரு அடி எடுத்துவைத்துவிட்டது பாகிஸ்தான் அணி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடக்கிறது. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், நாளைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே நாளைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. நாளைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறும்.

இதையும் படிங்க - பழசை மனசுல வச்சு டீம் எடுக்கக்கூடாது!உலகின் சிறந்த வீரரையே உட்கார வச்சுருக்கீங்க! செமயா விளாசிய முன்னாள் வீரர்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் உறுதியாக அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இவற்றுடன் நான்காவது அணியாக இந்தியா அல்லது நியூசிலாந்து அணி முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் எந்த 2 அணிகள் ஃபைனலில் மோதும் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் டி20 உலக கோப்பை ஃபைனலில் ஃபைனலில் மோதும் என கணித்துள்ளார் ஸ்டோக்ஸ். இந்திய அணி ஃபைனலுக்கு வரும் என ஸ்டோக்ஸ் நம்பவில்லை.

இதையும் படிங்க - ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

மனநிலையை சீராக்குவதற்கு கிரிக்கெட்டிலிருந்து சற்று ஓய்வு தேவை என்று கூறி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆடிய டெஸ்ட் தொடர், ஐபிஎல், டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் ஆடவில்லை. இந்தாண்டின் இறுதியில் நடக்கும் ஆஷஸ் தொடரில் ஸ்டோக்ஸ் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

Follow Us:
Download App:
  • android
  • ios