Asianet News TamilAsianet News Tamil

ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

டி10 லீக் தொடரில் புதிதாக களமிறங்கும் அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சாரா டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார் சாரா டெய்லர்.
 

sarah taylor becomes the first woman coach of mens franchise cricket
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 30, 2021, 2:24 PM IST

சர்வதேச அளவில் மற்ற விளையாட்டுகளை விட அதிகமான ரசிகர்களுடன் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்டில் ஆடவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் தான் பெரும் ரசிகர் கூட்டத்தால் பார்க்கப்படுகிறது. அதனால் ஆடவர் கிரிக்கெட்டுக்குத்தான் தான் வியாபார ரீதியாக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவமும் குறைவு; அதை பார்ப்பவர்களும் மிகக்குறைவு.

ஆனாலும், ஆடவர் கிரிக்கெட்டையும் கடந்து மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க வைத்தனர் சில மகளிர் வீராங்கனைகள். மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகிய இந்திய வீராங்கனைகளை போல, மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததில் முக்கியமானவர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்டர் சாரா டெய்லர். ரசிகர்களை மட்டுமல்லாது, முன்னணி கிரிக்கெட் வீரர்களையும் தனது திறமையால் கவர்ந்தவர் சாரா.

sarah taylor becomes the first woman coach of mens franchise cricket

2006ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆடிய சாரா டெய்லர், இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும், 126 ஒருநாள் போட்டிகளிலும், 90 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ள சாரா, 6000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்பெஷலே விக்கெட் கீப்பிங் தான்.

ஆடவர் கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், குமார் சங்கக்கரா, தோனி உள்ளிட்ட பல அருமையான விக்கெட் கீப்பர்களை பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு சற்றும் சளைத்திராத திறமையான விக்கெட் கீப்பர் தான் சாரா டெய்லர். தோனி கண்ணிமைக்கும் நொடியில், மின்னல் வேகத்தில் எத்தனையோ ஸ்டம்பிங்குகள் செய்து பார்த்திருக்கிறோம். அதே வேகத்தில் மகளிர் கிரிக்கெட்டில் செயல்பட்ட விக்கெட் கீப்பர் தான் சாரா டெய்லர். துரிதமான செயல்பாட்டில் இவர் தோனியை போன்றவர்.

இதையும் படிங்க - பழசை மனசுல வச்சு டீம் எடுக்கக்கூடாது!உலகின் சிறந்த வீரரையே உட்கார வச்சுருக்கீங்க! செமயா விளாசிய முன்னாள் வீரர்

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், அபார திறமைசாலியுமான ஆடம் கில்கிறிஸ்ட்டே, திறமையில் என்னை விட சிறந்தவர் சாரா டெய்லர் என்று பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய மகளிர் விக்கெட் கீப்பர்களில் 136 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார் சாரா டெய்லர். 51 ஸ்டம்பிங்குகளுடன், அதிகமான ஸ்டம்பிங் செய்த மகளிர் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்தியாவின் ஏ.ஜெயினுடன் பகிர்ந்துகொள்கிறார் சாரா டெய்லர்.

sarah taylor becomes the first woman coach of mens franchise cricket

தான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் தனது திறமையால் அனைவரையும் எண்டர்டெய்ன் செய்த சாரா டெய்லர், ஓய்வுக்கு பிறகு தனது திறமையை வீணடிக்காமல் பலரை உருவாக்கும் பயிற்சியாளர் பொறுப்பை கையிலெடுத்துள்ளார். 

இதையும் படிங்க - இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் கொண்ட சாரா டெய்லர், டி10 லீக்கில் புதிதாக இணையும் அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஆடவர் அணிக்கு பயிற்சியாளராகும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் சாரா டெய்லர். ஆடவர் ஆதிக்கம் நிரம்பிய கிரிக்கெட்டில், அதுவும் ஒரு ஆடவர் அணிக்கே சாரா பயிற்சியாளர் ஆகியிருக்கிறார் என்றால் பெரும் சாதனை தான்.

இதையும் படிங்க - ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்த ஆசிஃப் அலி! ஆஃப்கானை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு காலை வைத்த பாக்.,

Follow Us:
Download App:
  • android
  • ios