T20 World Cup: காயத்தால் விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ப்ரிட்டோரியஸுக்கு மாற்று வீரர் அறிவிப்பு
டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ப்ரிட்டோரியஸ் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.
டி20 உலக கோப்பைக்கான அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருசிலர் காயத்தால் வெளியேறிய நிலையில், அவர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இந்திய அணியில் காயத்தால் விலகிய பும்ராவுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக
டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றிருந்த பவுலிங் ஆல்ரவுண்டர் ப்ரிட்டோரியஸ், இந்தியாவிற்கு எதிராக இந்தூரில் நடந்த 3வது டி20 போட்டியில் காயமடைந்ததால் அவர் டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து விலகினார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக இடது கை ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான மார்கோ யான்சென் அறிவிக்கப்பட்டுள்ளார். மார்கோ யான்சென் நல்ல உயரமான இடது கை ஃபாஸ்ட் பவுலர். எனவே நன்றாக பவுன்ஸ் ஆகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கண்டிப்பாக சோபிப்பார். பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்
டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிக் கிளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, வைன் பார்னெல், மார்கோ யான்சென், ககிசோ ரபாடா, ரைலீ ரூசோ, டப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ்.